ஒரு திருமணமும் சில மனிதர்களும்
அழகாக அசடு வழிந்து நிற்கும் மணமகன்
அவன் இடுப்பு வேட்டி அவிழ்ந்து விட கூடாதென்று
வேண்டி நிற்கும் அவன் தோழன்
அழகான ராட்ஷஸியை ராட்ஷஸியாக்கும் அலங்காரத்துடன் மணமகள்
வந்தவர்களை வரவேற்க வாயிலை காக்கும் அப்பா
ஆயிரம் பெருமைகளை அன்றுதான் மகளுக்கு சூட்டும் அம்மா
“அடுத்து நீதான்” என்ற இனிய மிரட்டலை தாங்கி நிற்கும் தங்கை
பழைய நினைவுகளும் கலைந்த கனவுகளுமாய் உறவினர்கள்
எதற்கென்றே தெரியாமல் மகிழ்ச்சியாய் திரியும் சிறுவர்கள்
வெறும் இலை விழாமல் விருந்தோம்பல் படைத்தவர்கள்
வாழ்கவென்று வாழ்த்தும்
நாய்களும் சில மனிதர்களும்….


Comments
Post a Comment